search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

    • ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது.
    • லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது. லாரியை ஏற்காடு பட்டிபாடி வேலூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதனால் டிரைவர் ஏழுமலை லாரியை நிறுத்த முடியாமல் திணறினார். உடனே அந்த லாரியில் இருந்த மோகன் என்பவர் கீழே குதித்து கல் எடுத்து டயர் அடியில் வைத்து லாரியை நிறுத்த முயற்சித்தார். ஆனால், முடியவில்லை.

    இதனால் லாரி பக்கத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஏழுமலை படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×