என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம் .
அரூர் பேருந்து நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு
- பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- ஆய்வின் போது தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.362.00 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள பேருந்து நிலையத்தினை நவீனபடுத்தும் பணி நடைபெற உள்ளதை பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின் போது அரூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சூர்யா தனபால், செயல்அலுவலர் கலைராணி, இளநிலை பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story