என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் அருகே   இடி தாக்கியதில் ஆடுகள் கருகி சாவு
    X

    பென்னாகரம் அருகே இடி தாக்கி கருகி செத்த ஆடுகள்.

    பென்னாகரம் அருகே இடி தாக்கியதில் ஆடுகள் கருகி சாவு

    • இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
    • 10 ஆடுகள் பலியான பரிதாபம்.

    பென்னாகரம்,

    பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோடுப்பட்டி கிராமத்தில் வசிபவர் திம்மன் மகன் ராஜி. இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் ஆடு மேய்த்து விட்டு மாலை தன் வயல் வெளியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வந்து விட்டார். நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. பலத்த சத்தத்துடன் இடி,மின்னலும் தாக்கியது.அப்போது இடி இடித்ததில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

    Next Story
    ×