என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே  கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
    X

    பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

    • அதிகாலை 3 மணிக்கு அவ்வாறு சென்ற செல்லான் தனக்கு உணவு கேட்டுள்ளார்.
    • அதிகாலை 5 மணியளவில் செல்லானை பிணமாகத்தான் மீட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள பனங்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்லான் (வயது 65).இவருக்கு கண் பார்வையில் குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.

    செல்லான் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று தனக்கு பசிக்கும்போது உணவு வாங்கி சாப்பிடுவாராம்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு அவ்வாறு சென்ற செல்லான் தனக்கு உணவு கேட்டுள்ளார்.

    அந்த வீட்டில் உணவு இல்லை என்று கூறிவிட்டனர்.

    இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய செல்லான் நடந்து சென்ற வழியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.

    இந்த சத்தம் கேட்டு வந்து பார்த்தவர்கள் பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த செல்லானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதிகாலை 5 மணியளவில் செல்லானை பிணமாகத்தான் மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×