என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்
- காலை வீட்டை விட்டு சென்ற நதியா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பிஞ்சுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(57). இவரது மகள் நதியா(20).
இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டை விட்டு சென்ற நதியா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கோவிந்தசாமி கொடுத்துள்ள புகாரில் அதே கலோரியில் படித்து வரும் ஒரு மாணவன்தான் நதியாவை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story






