search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் ஆக்கிரமித்த கரும்பு தோட்டம்  அகற்றம்
    X

    கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் ஆக்கிரமித்த கரும்பு தோட்டம் அகற்றம்

    • கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் ஆக்கிரமித்த கரும்பு தோட்டம் அகற்றப்பட்டது.
    • நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருேக விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) இவர் இதே பகுதியில் உள்ள மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மூலம் மயான எல்லை அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது.


    இந்நிலையில் நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பன்னீர்செல்வம் தலைமையில் மயானத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் பாலு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள், ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    Next Story
    ×