search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் நவராத்திரி விழா கோலாகலம்
    X

    செங்கோட்டை பகுதியில் நவராத்திரி விழா கோலாகலம்

    • செங்கோட்டை, சுற்று வட்டார கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
    • தினமும் அம்பாளுக்கு மங்கள ஆரத்தி, தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் துர்க்கா பூஜையாகவும், தென் மாநிலங்களில் விஜயதசமி, ஆயுத பூஜை என்றும், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    செங்கோட்டை கோவில்கள்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நவராத்திரி விழாவையொட்டி செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி கோவில், முப்புடாதி அம்மன் கோவில், வண்டிமலச்சி அம்மன் கோவில், நித்திய கல்யாணி அம்பாள் கோவில், பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், ஸ்ரீவிநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் உட்பட செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் தினமும் மங்கள ஆரத்தி தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை போன்று வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொலு பொம்மைகள்

    இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகளாக தெய்வ அவதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மை செட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரித்திர நிகழ்வுகளை பறைசாற்றும் விதமாக கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், கல்யாண கார் ஊர்வலம், கிராம செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்டவைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், குபேரன் பொம்மைகள், காவலர்கள், கிரிக்கெட் செட், விளையாட்டு, உயிரினங்கள் சாதன செட்களுடன் 5, 7, 9, 11 என அவரவர் விருப்பத்திற்கிணங்க படிகள் அமைக்கப்பட்டு அவற்றில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    Next Story
    ×