search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
    X

    விழாவில் கலந்து கொண்டவர்கள்.

    தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

    • மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடக்கிறது.
    • 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயன் பெற்று வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய புவி அமைப்பியல் துறையின் சார்பாக மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடக்கிறது.

    விழாவில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பாலகுருநாதன் கலந்துகொண்டு விழா துவக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) கார்த்திகேயன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து இந்திய அரசின் அணு கனிம பிரிவுகள் ஆராய்ச்சி துறையில் பெங்களூரு மண்டல இயக்குனர் ஸ்ரீ மயங்க் அகர்வால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    சஞ்சய் காந்தி புவிய அமைப்பியல் துறையில் உதவி பேராசிரியர் இச்சங்கம் தோற்று விக்கப்பட்டதற்கான காரணத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து சங்கத்தின் மாணவர் பிரிவு தலைவி நிவேதிதா இவ்வமைப்பின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். முன்னதாக விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் புவி அமைப்பியல் துறையில் தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.

    முடிவில் இச்சங்க மாணவப் பிரிவு துணைத் தலைவி செல்வி பூவிழி நன்றி உரை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயன் பெற்று வருகின்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இத்துறையின் உதவி பேராசிரியர்களான வித்யாசாகர், அருண் பாரதி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×