என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணிக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதை பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.
ஒட்டன்சத்திரத்தில் நாடார் சங்க ஆண்டுவிழா
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நாடார் உறவின்முறை சங்க ஆண்டு விழா நடந்தது
- நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நாடார் உறவின்முறை சங்க ஆண்டு விழா நடந்தது.இதற்கு ஒட்டன்சத்திரம் நாடார் உறவின்முறை செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.தலைவர் தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
இதில் பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 10,12 -ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் எம்.பி. வேலுச்சாமி, திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி,சமத்துவ மக்கள் கழகம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் குருபாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், கரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்,
மாநில வர்த்தக அணி செயலாளர் மங்கை ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.