என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணமான இளம்பெண் 2-வது முறையாக வீட்டை விட்டு ஓட்டம்
- நேற்று பிரியா திடீரென வீட்டை விட்டு இரண்டாவது முறையாக மாயமானார்.
- இது குறித்து தொப்பூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்தள்ள பப்பிரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த வருடம் பிரியா வீட்டை விட்டு மாயமானார். பின்னர் போலீசார் அவரை மீட்டு மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்தனர். இதையடுத்து நேற்று பிரியா திடீரென வீட்டை விட்டு இரண்டாவது முறையாக மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல.
இது குறித்து தொப்பூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story