search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை
    X

    மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை

    • மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்டார்.
    • இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மணி என்ற நயினார் (வயது 64). இவர் ஒரு வழக்கில் கைதாகி 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இருந்த போதிலும் அவருக்கான ஆயுள் தண்டனையை கோர்ட்டு உறுதி செய்தது.

    இதனைத் தொடர்ந்து மணி என்ற நயினார் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை மத்திய சிறையில் நயினார் 3 ஆண்டு, 7 மாதம் வரை சிறை தண்டனை அனுபவித்து வந்தார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரை விடுதலை செய்வது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது. 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகள் சில குறிப்பிட்ட வழக்குகளில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில் மணி என்ற நயினார் மதுரை மத்திய ஜெயலலிதா இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    Next Story
    ×