என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
    X

    கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    • உசிலம்பட்டி அருகே கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • உசிலம்பட்டி அருகே கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்ப நாயக்கனூர். இந்த கிராமத்தில் பழமையான ஒட்டக்கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள், நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கோரி தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்கு உட்பட்ட 13 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையில், உசிலம்பட்டி முருகன் கோவிலில் இருந்து கோட்டாட்சி யர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தார்.

    Next Story
    ×