என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வில் தீண்டத்தகாத சாதி எது? என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை
    X

    மதுரை சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வில் தீண்டத்தகாத சாதி எது? என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

    • சி.பி.எஸ்.இ. பிரிவில் படிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடைக்கால தேர்வு நடந்தது.
    • சமூக அறிவியல் பாட தேர்வில் மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாததாக பார்க்கப்பட்டது? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் அரும்பனூர் அருகில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. அண்மையில் சி.பி.எஸ்.இ. பிரிவில் படிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடைக்கால தேர்வு நடந்தது.

    இதில் சமூக அறிவியல் பாட தேர்வில் மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாததாக பார்க்கப்பட்டது? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ. பள்ளி பாட திட்டத்தின்படியே கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் தேர்வுத்தாளில் வராமல் தவிர்ப்போம் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×