என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி கற்களை வெட்டி கடத்திய லாரி டிரைவர் கைது
- மொரப்பூர் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
- ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் அனுமதியின்றி வெள்ளி கற்களை கடத்தியது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சுந்தரபள்ளி சாலையில் அனுமதியின்றி கற்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மொரப்பூர் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுந்தரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் அனுமதியின்றி வெள்ளி கற்களை கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த கர்த்தான்குளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது40) என்பவரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியையும், அதில் இருந்த 150 கற்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






