என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள்
    X

    கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் தொழில் முனைவோர் கடன் உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள்

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 415 மனுக்கள் வரப்பெற்றன.
    • தொழில் முனைவோர் கடனுதவிகள், வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணை மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 415 மனுக்கள் வரப்பெற்றன.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி வட்டார வணிக வள மையம், அரூர் வட்டாரம் சார்பில் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 4.00 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் தொழில் முனைவோர் கடன் உதவிகளையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனு அளித்த இன்றைய தினமே ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2310- மதிப்பீட்டில் ஒளிரும் மடக்குக்குச்சி, கருப்பு கண்ணாடி, பிரௌலி கைகடிகாரம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.6,12,310- (ரூ.6.12 லட்சம்) மதிப்பிலான தொழில் முனைவோர் கடனுதவிகள், வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணை மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×