என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தொழிலாளி சாவு
- அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள குண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது47).
இவர் நேற்றிரவு பாலக்கோடு பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே முருகன் உயிரிழந்தார்.
இத குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






