search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்
    X

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது.

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்

    • ரூ. 2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது.
    • கூட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாந கராட்சி கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

    குடிநீர் கட்டணத்துக்கு 2 முறை பில்போடப்படுவது ஏன் ?, மாநகரின் பைராகி தோப்பில் உள்ள குளத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது.

    மழைக்காலத்தில் குளத்தில் இருந்து மெயின் ரோட்டை கடந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது.

    இதைப்போல ரூ.2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது. ரூ.2 ஆயிரம் கூடசெலவு செய்ய மாநகராட்சியில் நிதி இல்லையா.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்த 3 கழிவறைகளில் தற்போது 2 கழிவறைகள் மூடப்பட்டுள்ளது.

    இதனால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கழிவறைகளை திறந்துவிட வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    மாநகராட்சி அவசரக்கூ ட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. இந்த தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

    மாநகராட்சி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது வீடுதோறும் கொசு வலைகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.

    மாநகராட்சியில் போதிய வரிவசூல் கிடைத்து விட்டதால் கவுன்சிலர்களின் குறைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் என்ஜினீயர் லலிதா, நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் மாநகரட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×