என் மலர்
உள்ளூர் செய்திகள்

முருங்கை விவசாயம் பாதிப்பு
- முருங்கை விவசாயம் பாதிப்பாகியுள்ளது
- தொடர்ந்து மழை பெய்வதால்
கரூர்
கடந்த காலங்களில் பருவநிலை மாற்றத்தாலும் பல்வேறு சூழ்நிலைகளாலும் முருங்கைக்காய் வரத்து குறைந்தது. தற்போது முருங்கை மரங்களில் பூக்கள் பிடித்து முருங்கைகாய் மகசூல் ஓரளவு இருந்து வந்தது. இந்நிலையில் அரவக்குறிச்சி, சின்னாகவுண்டனூர், அரிக்காரன்வலசு, இனுங்கனுார், செல்லிவலசு, வெஞ்ச மாங்கூடலுார், நாகம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் முருங்கை மரங்களில் பிடித்திருந்த பூக்கள் உதிர்ந்து வருகிறது. இதனால் ஓரளவு மேம்பட்டிருந்த முருங்கை மகசூல் முற்றிலும் குறைந்து விட்டது.தற்போதைய சூழ்நிலையில் அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கருமுருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், ரூல் முருங் கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், செடி முருங்கைக்காய் மற்றும் மரம் முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.