என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு நகராட்சியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்
- 19 வது வார்டு ஜாண் போனால் நகர் பகுதியில் பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை போட்டு செல்கின்றனர்.
- குப்பை அதிக அளவில் இருப்பதால் அந்தப் பகுதியில் தூர் நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு நகராட் சிக்குட்பட்ட 19 வது வார்டு ஜாண் போனால் நகர் பகுதியில் பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை போட்டு செல்கின்றனர். இது சம்பந்தமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது குப்பை அதிக அளவில் இருப்பதால் அந்தப் பகுதியில் தூர் நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதியில் இருக்கின்ற குப்பைகளை அள்ளி மேலும் அந்த பகுதியில் குப்பை போடாமல் இருப்பதற்காக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story






