search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் காசநோய் தொற்று
    X

    குமரியில் காசநோய் தொற்று

    • கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் தொற்று கண்டறிவது குறித்த எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை வழங்கியுள்ளது. நமது மாவ ட்டத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நடமாடும் நுண்க திர் வாகனத்தில் பொருத்த ப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி, மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்-ரே-க்களை உடனு க்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில 10 எக்ஸ்-ரே எடுக்கும் திறன் கொண்டவை.

    குமரி மாவட்ட நிர்வா கத்தால் நோய் ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதால் கடந்த 10 ஆண்டுகளில் காச நோயாளிகளின் எண்ணி க்கை 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காசநோய் தொற்று வகிதம் 20 சதவீகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்திய மானது.

    இதனைப் பாராட்டும் விதமாக அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்தக வணிகர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் விதமாக 35 நபர்களுக்கு பாரா ட்டுச் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (காசநோய்) துரை, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மருத்துவர்கள் பிரதீப், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×