என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற சாலையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம் - கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது
- சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட் டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று (புதன்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகை யில், மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை பகுதி களை தூர் வாரி தூய்மைப்படுத்தும் பணி அந்தந்த துறைகளின் சார்பில் நடைபெற்று வருகிறது.
ஒரு முறை பயன் படுத்தக்கூடிய பிளாக்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு, மாங்ரோ மரக்கன்றுகள் வளர்ப்பது போன்ற பசுமை நட வடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாந்தபுரம் சாலை முதல் பாம்பான்விளை வரையிலான சாலை ஓரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டங்களில் அனைத்து சாலை யோரங்களையும் தூய்மைப் படுத்துவதற்கு துறை சார்ந்த அலுலவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பாஸ்கரன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.






