search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே கடலில் குதித்து தற்கொலை பெண் உடலைத் தொடர்ந்து 3 வயது குழந்தை பிணமும் மீட்பு
    X

    குளச்சல் அருகே கடலில் குதித்து தற்கொலை பெண் உடலைத் தொடர்ந்து 3 வயது குழந்தை பிணமும் மீட்பு

    • 2-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் மீட்டனர்
    • தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு சசிகலா அதே ஆட்டோவில் குழந்தையுடன் சென்றார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெல்பின் (வயது 37). இவர் மாலத்தீவில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மெர்ஜித் (3Ñ) என்ற மகன் உள்ளான். மெல்பின் வெளிநாட்டில் உள்ள நிலையில் நேற்று காலை சசிகலா தனது குழந்தை மற்றும் தாயாரு டன் ஆட்டோவில் காப்பு க்காட்டில் ஒரு இடத்தில் பிரசன்னம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு சசிகலா அதே ஆட்டோவில் குழந்தையுடன் மண்டைக்காடு பகுதிக்கு சென்றார்.

    அப்போது வழியில் மதியம் சாப்பிடுவதற்கு பிரியாணி பொட்டலம் வாங்கி உள்ளார்.மதியம் மண்டைக்காடு அருகே வெட்டு மடை கடல் பகுதிக்கு சென்ற சசிகலா, அங்கு வைத்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    பின்னர் கையை கழுவி வருவதாகவும் மணற்பரப்பில் நிற்குமாறும் ஆட்டோ டிரைவரிடம் கூறிவிட்டு சசிகலா தனது குழந்தையுடன் சென்று உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சசிகலா திரும்பி வராததால் ஆட்டோ டிரைவர் பீதியடைந்தார்.

    அவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவி லிருந்து இறங்க முடியாமல் தவித்தார்.அப்போது அங்கு வந்த வாலிபரிடம் ஒரு தாயும், குழந்தையும் கை கழுவ போனது குறித்து கூறினார்.

    இதை கேட்ட வாலிபர் விரைந்து சென்று பார்த்த போது சசிகலா உடல் கடலில் மிதந்தது தெரிய வந்தது. உடனே கடலில் குதித்த அவர், சசிகலா வின் உடலை மீட்டு கரை சேர்த்தார். ஆனால் குழந்தையை காணவில்லை.

    இதுபற்றிய தகவலறிந்த குளச்சல் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகி யோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். தொடர்ந்து சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் குழந்தையை தேடும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. தொடர்ந்து 2-வது நாளாக இன்று கொட்டில் பாடு, மண்டைக்காடு புதூர், குளச்சல் பகுதி மீனவர்களின் உதவியுடன் குழந்தை உடலை தீவிரமாக தேடினர். மீனவர்கள் கட்டு மரங்களில் சென்று குழந்தை மெர்ஜித்தை தேடினர்.

    இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் குழந்தை மெர்ஜித் உடல் கடலில் மிதந்துள்ளது. அதனை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மனைவி தற்கொலை குறித்த தகவல் வெளி நாட்டில் இருக்கும் மெல்பி னுக்கு தெரிவிக்க ப்பட்டது. அவர் உடனடியாக அங்கி ருந்து புறப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவர் வருகிற 2-ந் தேதி ஊருக்கு வர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சசிகலா தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சி னையா? அல்லது வேறு ஏதும் காரணமா?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×