search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் ரூ.58 லட்சம் மதிப்பிலான சாலைபணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் ரூ.58 லட்சம் மதிப்பிலான சாலைபணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 44-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாகவும், ரோட்டோரமுள்ள ஆக்கிரமிப்புகளை மாற்றவும், தெரு முடியும் இடத்தில் நீர்உறிஞ்சி குழி அமைக்கவும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெருக்களில் ரோட்டோரமுள்ள செடிகளை வெட்டி மாற்றவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை முறைப்படுத்த நீர்உறிஞ்சு குழி அமைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    மாநகராட்சி நிர்வாக அலுவலர் ராம்மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், பொதுக்குழு உறுப்பினர் சதாசிவன் உட்பட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டு ஸ்காட் நகர் பகுதியில் ரூ.48.75 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவிப் பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜா, கவுசிகி, பகுதி செயலாளர் சேக்மீரான் வட்டச் செயலாளர் பிரபாகரன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×