என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர், சுகாதார வசதிகள் குறித்து - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
  X

  நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர், சுகாதார வசதிகள் குறித்து - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒலி, ஒளி அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு
  • தெரு விளக்குகள் அமைப்பது, பூங்காக்களின் எண்ணிக்கை, சுகாதார வசதி உள்ளிட்டவைகள்

  நாகர்கோவில் :

  நாகர்கோவில் மாநக ராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

  மாநகராட்சி அலுவலக ஒலி, ஒளி அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் , பாதாள சாக்கடைத்திட்டம், மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள், மக்கள் தொகை கணக்கு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை.

  தெரு விளக்குகள் அமைப்பது, பூங்காக்களின் எண்ணிக்கை, சுகாதார வசதி உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

  அதனைத்தொடர்ந்து, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்பெதஸ்தா குளத்தின் நீர் நிலை புனரமைப்பு பணிகள், ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய நகர் குளத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்.

  மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் சுப்பையார் குளத்தில் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

  மாநகராட்சி அலுவலக த்திற்கென புதிதாக வாங்க ப்பட்ட மக்கும் மற்றும் மக்கா குப்பை அள்ளும் வாகனங்களையும் கலெக்டர் ஸ்ரீதர், பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதி யில் அமைந்துள்ள சபையார் குளத்தினை தூர்வாரி புனரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

  ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×