search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் ஹெல்மெட் சோதனை தீவிரம்
    X

    குமரியில் ஹெல்மெட் சோதனை தீவிரம்

    • கடந்த ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதம்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனை தீவிரப் படுத்தப்பட் டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஹெல்மெட் கட்டா யமாக்கப்பட்டுள்ள நிலை யில் கலெக்டர் அலுவல கத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய தொடங்கி யுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இந்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் இன்று காலையிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனார். இந்த சோதனையில் பெண்களும் சிக்கினார்கள். வாகன ஓட்டிகள் சிலர் போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும் வாகனங்களை திருப்பி ஓட்டி சென்றனர். கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாத வர்களுக்கு அபராதம் விதித்தனர். காலை தொடங்கிய வாகன சோதனை மதியம் வரை நீடித்தது.

    இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கனிம வளங்கள் கடத்த லை தடுக்கவும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகி றார்கள. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகிறார்கள்.

    வடசேரி, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் நேற்று இரவு தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட் டது.

    Next Story
    ×