search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் மூடல்
    X

    பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் மூடல்

    • பேச்சிப்பாறையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக சரிந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி சிற்றார் அணைகளில் இருந்து கன்னி பூ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.3 அணைகளில் இருந்தும் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை அனந்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு ள்ளது. பேசிப்பாறை அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.20 அடியாக உள்ளது. அணைக்கு 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 58.50 அடியாக உள்ளது.அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சிற்றார் -1 அணையின் நீர்மட்டம் 11.61 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.71 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 28. 70 அடியா கவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக சரிந்துள்ளது.

    Next Story
    ×