search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 இடங்களில் பாரதிய ஜனதாவினர் போராட்டம்
    X

    12 இடங்களில் பாரதிய ஜனதாவினர் போராட்டம்

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது வழக்கு
    • தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு

    நாகர்கோவில்:

    வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடு பட்ட 63 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்க ப்பட்டனர். கைது செய்யப்பட்ட 63 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உள்பட 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டதை அறிந்த கட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஜெகநாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பாரதிய ஜனதாவினர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குலசேகரம் சந்திப்பில் மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமையிலும், தக்கலை பஸ் நிலையம் பகுதியில் விவசாய அணி தலைவர் முருகராஜன் தலைமையிலும், கொல்லங்கோடு கண்ண நாகம் சந்திப்பு பகுதியில் கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் பத்மகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.

    புதுக்கடை பகுதியில் பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை யிலும், திங்கள்நகர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.மறியல் போராட்டத்தில் வில்லுகுறி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தோவாளையில் மாவட்ட பொதுச் செயலாளரின் சொக்கலிங்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. சுசீந்திரம், மேல்புறம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×