என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே நாயை வெட்டிக் கொன்ற கும்பல்
- அந்த வழியாக யாராவது சென்றால், நாய் குறைப்பது வழக்கம்
- ஜஸ்டின் வெளியே வந்து பார்த்த போது 2 பேர் கத்தியோடு நிற்பதை பார்த்துள்ளார்.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி அருகே மரப்பாலம் பகுதியில் வசிப்பவர் ஜஸ்டின், கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அதனை வீட்டு முன்பு கட்டி இருந்தார். அந்த வழியாக யாராவது சென்றால், நாய் குறைப்பது வழக்கம். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் சம்பவத்தன்று நாயை அடித்ததோடு, கத்தியாலும் குத்தி உள்ளனர். இதில் நாய் பரிதாபமாக இறந்தது. நாயின் அலறல் சத்தம் கேட்டு ஜஸ்டின் வெளியே வந்து பார்த்த போது 2 பேர் கத்தியோடு நிற்பதை பார்த்துள்ளார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஜஸ்டின் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






