search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாம்பழத்துறையாறில் 32 மி.மீ. மழை
    X

    மாம்பழத்துறையாறில் 32 மி.மீ. மழை

    • அணைகளில் இருந்து 1029 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த இரண்டு நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவ தும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆணைக் கிடங்கு குருந்தன்கோடு, அடையாமடை, தக்கலை, குளச்சல், இரணியல், நாகர்கோவில் பகுதிகளிலும் இரவு விட்டு விட்டு மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளி லும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-4.4, பெருஞ்சாணி-3, சிற்றார்-1-12.6, சிற்றார்-2-22.8, தக்கலை-8.3, குளச்சல்-12.8, இரணியல்-14, பாலமோர்- 9.2, மாம்பழத்துறையாறு- 32, திற்பரப்பு-17.2, கோழிப்போர் விளை-6.2 ஆணைக்கிடங்கு-30.2, அடையாமடை-5, குருந்தன்கோடு-13.8, முள்ளங்கினாவிளை-4.6.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.87 அடியாக உள்ளது. அணைக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 569 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. அணைக்கு 373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் நீர்மட்டம் 11.97 அடியாக உள்ளது. அணைக்கு 137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 அணைகளில் இருந்து 1029 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    Next Story
    ×