search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்குளம் பேரூராட்சி ஏ.வி.எம். கால்வாய் சாலை ரூ.5 லட்சம் செலவில் சீரமைப்பு
    X

    காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    கீழ்குளம் பேரூராட்சி ஏ.வி.எம். கால்வாய் சாலை ரூ.5 லட்சம் செலவில் சீரமைப்பு

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கினார்
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட, ஸ்கை சந்திப்பு முதல் ஏ.வி.எம்.கால்வாய் வரை செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஸ்கை ஜங்சன் முதல் ஏ.வி.எம்.கால்வாய் வரை செல்லும் சாலையை காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து இந்த சாலையை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ், வார்டு கவுன்சிலர் அனிதா ராஜகிளன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×