search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் 24ந் தேதி தொடக்கம்
    X

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் 24ந் தேதி தொடக்கம்

    • 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.

    காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம், வரும் 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி பந்தகால் நடப்பட்டது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.

    தினமும் காலை, மாலையில், அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8-ந் தேதி காலை விஸ்வரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவமும் நிறைவு பெறுகிறது.

    உற்சவம் நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 24-ந் தேதி பகல் சண்டிஓமம், இரவு வெள்ளி மூஷிகம், 25 பகல் வெள்ளி விருஷம், இரவு தங்கமான், 26 பகல் மகரம், இரவு சந்திர பிரபை, 27 பகல் தங்க சிம்மம், இரவு யானை, 28 பகல் தங்க சூர்ய பிரபை, இரவு தங்க அம்சம்.

    மார்ச் 1 பகல் தங்க பல்லக்கு, இரவு நாகம், 2 பகல் முத்து சப்பரம், இரவு தங்க கிளி, 3 பகல் ரதம், 4 பகல் பத்ர பீடம், இரவு குதிரை, 5 பகல் ஆள் மேல் பல்லக்கு, இரவு வெள்ளி ரதம், 6 பகல் சரபம், இரவு கல்பகோத்யானம், 7 தங்க காமகோடி விமானம், 8 பகல் விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி உற்சவம்.

    Next Story
    ×