என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் அதிவேகமாக ஓட்டினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
    X

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் அதிவேகமாக ஓட்டினால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

    • மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டுதல் பிரிவு 279, மரணம் விளைவிக்கும் விதத்தில் குற்றம் செய்தல் பிரிவு 308, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் பிரிவு 336, மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் பிரிவு 184 மற்றும் குற்றங்களை தூண்டுதலுக்கான தண்டனை பிரிவு 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வாகனங்களை ஓட்டி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×