என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளியில்   விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நல்லம்பள்ளியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • வீடற்ற விவசாய கூலிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.
    • நல்லம்பள்ளி சந்தையில் கூடுதல் வரி வசூல் செய்வதாக புகார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார், மாதையன்,மலையன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகள்:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 2022-2023 வேலை அட்டையை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், மேலும் வீடற்ற விவசாய கூலிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் எனவும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளிகள் விதவைகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் நல்லம்பள்ளி சந்தையில் கூடுதல் வரி வசூல் செய்வதாகவும் செய்தி வந்துள்ளது. எனவே சந்தை ஒப்பந்ததாரர் மீது உரிய விசாரணை நடத்தி விவசாயிகளும் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படாத வகையில் சந்தை வரி வசூல் செய்ய வேண்டும்.

    நல்லம்பள்ளி வட்டம் தலைநகரம் ஆகி ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இந்த பகுதியில் தலைமை மருத்துவமனை, நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை, கருவூலம், எஸ்பிஐ வங்கி, தீயணைப்பு நிலையம், ஆகியவைகள் இன்றுவரை ஏற்படுத்தவில்லை. அதனை உடனடியாக இப்பகுதியில் நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    இத்தகைய கோரிக்கை களை மாவட்ட செயலாளர் பிரதாபன் விளக்கிப் பேசினார், மாவட்ட தலைவர் மாதையன் ,மாவட்ட துணைச் செயலாளர் பச்ச கவுண்டர், ராஜகோபால்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×