என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி நகராட்சியில்  உயர்கோபுர மின் விளக்கு பராமரிப்பு பணி
    X

    கிருஷ்ணகிரி நகராட்சியில் உயர்கோபுர மின் விளக்கு பராமரிப்பு பணி

    • நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உயர் கோபுர மின் விளக்கில் பழுதடைந்த பல்புகளை மாற்றி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகளை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நவாப், கவுன்சிலர்கள் மத்தீன், பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல்சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    இது குறித்து நகராட்சி தலைவர் கூறுகையில், நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார், ரூ.2.50 கோடி ரூபாய் மதிப்பில், 1,990 எல்.இ.டி., பல்புகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.

    Next Story
    ×