search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியனூர் ஊராட்சியில்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர்  திடீர் ஆய்வு
    X

    கிளியனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கிளியனூர் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • கிளியனூர் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு சரியான நேரத்தில் வருகை புரிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை வழங்கும் பிரிவு, மருந்துகள் இருக்கும் அறை, ஆய்வுக்கூடம், ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அவ்வப்பொழுது மருந்து, மாத்திரைகள் போதிய அளவு உள்ளதா? என்பதை டாக்டர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தியதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டு குழந்தை பிறந்த தாய்மார்களிடம் தாயும், சேயும் நலமாக உள்ளீர்களா? என கேட்டறிந்து, தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான மாதாந்திர பரிசோதனை சரியான காலகட்டத்தில் மேற்கொள்ள டாக்டர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, வல்லம் ஊராட்சி ஒன்றியம், நாட்டார்மங்கலம் அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் காலி இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திட அறிவுறுத்தியதுடன், தினமும் குழந்தைகளுக்கு சத்தான சுகாதாரத்துடன் கூடிய உணவினை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×