என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் பகுதியில்சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரம்
    X

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் அதிக அளவு விவசாயிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட சர்க்கரைவள்ளி கிழங்குகளை அறுவடை செய்த போது எடுத்தபடம்.

    காரிமங்கலம் பகுதியில்சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரம்

    • ஒரு கிலோ சர்க்கரைவள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கிறது.
    • ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கடந்த வருடம் நல்ல பருவமழை பெய்துள்ளது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நல்ல பருவமழை பொழிந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மானாவரி பயிர்கள் சாகுபடி அதிகரித்துள்ளது.

    இதில் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான குட்டப்பட்டி, மன்னாடிப்பட்டி, முருக்கம் பட்டி, நாகணம்பட்டி, முல்லனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. பின்னர் தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

    மூன்று மாத குறுகிய கால சாகுபடி பயிர் என்பதாலும் அதிக அளவு பூச்சி தாக்குதல் குறைவாகவும் மகசூல் அதிக அளவு கிடைப்பதாலும் ஏக்கருக்கு 75 ஆயிரம் முதல் 80,000 வரை லாபம் கிடைப்பதாலும் சாகுபடி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இங்கு விளையும் சிவப்பு கலர் சர்க்கரை வள்ளி கிழங்கு தருமபுரி மாவட்டம் மற்றும் திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மணப்பாறை, சென்னை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கநாதன் கூறியதாவது:-

    காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சர்க்கரைவள்ளி கிழங்கு 200- க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். குறுகிய கால பயிர் என்பதாலும் குறைந்த செலவில் நல்ல மகசூல் கிடைப்பதாலும் தொடர்ந்து சர்க்கரைவள்ளி கிழங்கை பயிரிட்டு வருகிறோம்.

    இங்கு விளையும் சர்க்கரைவள்ளி கிழங்கை மாவட்டத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ சர்க்கரைவள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கிறது. தற்பொழுது இரண்டு ஏக்கரில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளேன் குறைந்தது.

    ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. கூலி ஆட்களுக்கு வெட்டுக்கூலி கொடுத்தால் சற்று லாபம் குறைய வாய்ப்புள்ளது. விவசாயி களாகிய எங்களால் ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.

    இதனால் வியாபாரிகள் எங்களிடம் கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உழவர் சந்தை, தினசரி சந்தைகளில் கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×