என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
கம்பைநல்லூர் பேரூராட்சியில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள்
- ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
- அணையினையும் நீர் வரத்தினையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கம்பைநல்லூர் பேரூராட்சியில் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.202.28 லட்சம் மதிப்பீட்டில் 17 வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.115.50 லட்சம் மதிப்பீட்டில் 55 வீடுகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.317.78 லட்சம் (ரூ.3.18 கோடி) மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கம்பைநல்லூர் வார்டு எண் 1-ல் செல்லியம்மன் கோயில் அருகில் உள்ள கால்வாயினை தூர்வாரி, கரைகளை செம்மைபடுத்துதல் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும்,
வார்டு எண் 5-க்குட்பட்ட தங்கவேல் நகர் மற்றும் ஜெ.ஜெ நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்புத்திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கங்கிரிட் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஈச்சம்பாடியில் அமைந்துள்ள ஈச்சம்பாடி ஆணைக்கட்டினை நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை கேட்டறித்தார்.
அணையினையும் நீர் வரத்தினையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் துறை உதவி இயக்கநர் குருராஜான், கம்பைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன், நீர்வளத்துறை உதவி செயற் பெறியாளர் ஆறுமுகம், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணைத் தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






