search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களர்பதி பகுதியில்  பெண்கள் செவ்வாடையணிந்து அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
    X

     களர்பதி பகுதியில் முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்த காட்சி.

    களர்பதி பகுதியில் பெண்கள் செவ்வாடையணிந்து அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

    • பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.
    • ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர் பதி பகுதியில் 30 நாட்களாக நடைபெற்ற மஹாபாரத சொற்பொழிவு நிறைவு நாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடையணிந்து ஊர்வலமாக சென்று முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து ஊரின் முக்கிய வீதி வழியாக கேரளா செண்டை மேள தாளம் முழங்க பால் குடம் சுமந்து திரவுபதியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சிவகுருக்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.

    இவ்விழாவில் திரவுபதியம்மனை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இத்துடன் ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாய்க்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மற்றும் ஊர் பொதுக்கள் ஒருங்கிணைந்து செய்தனர்.

    Next Story
    ×