search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் தவணை தவறிய தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி
    X

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் தவணை தவறிய தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி

    • தவணைத் தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி வழங்கப்படும்
    • இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது

    தருமபுரி,

    வேலூர் மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப் பதிவாளர் தர்மராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வேலூர் மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 30 அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று தவணைத் தவறிய கடன் தாரர்களுக்கு ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன் தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தும் பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணைத் தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த சலுகை இந்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன் பிறகு இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்காது என அரசு அறிவித்துள்ளது. எனவே கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று தவணைத் தவறிய அனைத்து உறுப்பினர்களும் இச்சலுகையை பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியை மட்டும் செலுத்தி பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×