என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த காட்சி.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் -போலீஸ் சூப்பிரண்டு உத்தரவால் நடவடிக்கை
- பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் பயின்று வரும் மாணவர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
- செல்போன்களை தவறுத லாக உபயோகிக்க வேண்டாம் எனவும் இதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் விளக்கினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் பயின்று வரும் மாணவர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். அப்போது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், அதேபோல அரூர் சி -1 காவல் நிலையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உதவிகள் குறித்தும், இளம் வயது திருமணம், சைபர் கிரைம், காவல் உதவி மையம் உள்ளிட்டவைகளுக்கான இலவச எண்களை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்போது மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யும் நிகழ்வு என்பது பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும், காவல்துறையினரிடமோ அல்லது பெற்றோர்களிடமோ பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால் அதற்கு உண்டான அறிவுரைகளை வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாக்கப்படும் என தெரிவித்தனர்.
அதேபோல செல்போன்களை தவறுத லாக உபயோகிக்க வேண்டாம் எனவும் இதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் விளக்கினர்.






