என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி-விழுப்புரம் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு
- பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
- பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் புதுப்பேட்டை பகுதியில் இன்று காலை வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டு பனிப்பொழிவு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், பண்ருட்டி கும்பகோணம் சாலை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் சாலை, புதுப்பேட்டை அரசூர் சாலை, அண்ணாகிராமம்-பண்ருட்டி சாலை, கண்டரக்கோட்டை சென்னை சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
மேலும், பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சீதோஷ்ண மாற்றம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு முதல் பனி மூட்டம் மிகக்கடுமையாக இருந்தது. அதுவும் குறிப்பாக காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.
இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் எறும்புகள் ஊர்ந்து செல்வதுபோல் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.
மேலும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் பனிப்பொழிவு டெல்லியை மிஞ்சும் வண்ணம் இருந்தது. இதன் காரணமாக காலை 8.30 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்தே காணப்பட்டது.






