என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் பெய்த கனமழையால்சேரும் சகதியுமாக மாறிய  மாவட்ட விளையாட்டு மைதானம்
    X

    தருமபுரி விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் பெய்த கனமழையால்சேரும் சகதியுமாக மாறிய மாவட்ட விளையாட்டு மைதானம்

    • தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் ஒரே நாள் பெய்த மழையில் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
    • மழை பெய்யும்போது, ​​பாதையில் சேறும் சகதியுமாக மாறி, பயிற்சிக்கு இடையூறுஏற்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து விளையாட்டு போட்டிகளான வாலிபால், பேஸ்க ட்பால், கோ-கோ, கபடி, போன்ற விளையாட்டுக்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

    மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என நடைப்பயிற்சி, விளையாட்டு, உள்ளிட்டவைகளுக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் ஒரே நாள் பெய்த மழையில் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    இதனால் மைதானத்தில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு உண்டான கட்டமைப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

    மழைக்காலங்களில் மழை தண்ணீர் ஸ்கேட்டிங் மைதானம், வாலிபால் மைதானம், வில்வித்தை மைதானம், நடைபயிற்சி பாதை உள்ளிட்ட இடங்களில் மழை தண்ணீர் தேங்கி அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.

    இது குறித்து விளையாட்டு வீரர்கள் கூறும்போது தற்போது, மைதானத்தில் மண் பாதை மட்டுமே உள்ளது. மேலும் பயிற்சி மிகவும் கடினமாக உள்ளது. மேலும், மழை பெய்யும்போது, பாதையில் சேறும் சகதியுமாக மாறி, பயிற்சிக்கு இடையூறுஏற்படுகிறது. விளையாட்டு வீரர்களின் முன்னேற்றம் மேம்படும் அதன் மூலம் மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என்றனர்.

    உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''சமீபத்தில் தருமபுரியில் மாநில அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டி நடத்தப்பட்டது. ஆனால், மைதானம் மோசமானதால் பயன்படுத்தப்படாமல், தனியார் மைதானத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வது கடினம் என்றார்.

    Next Story
    ×