என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
- வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அரூர்,
அரூர் பொதுப்பணிதுறை குடியிருப்பில் பகுதி உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முதல்நாள் விநாயகர் பூஜை, தொடங்ப்பட்டது. விக்னேஷ்ரா பூஜை, மகாலட்சுமி ஹோமம், சுதர்ஷன ஹோமம் மஹா பூர்னாஹதி, வாஸ்து சாந்தி, பிரதான கும்ப் ஸ்தாபனங்கள், மஹா சாந்தி ஹோமம், அஷிமோசனம், அதிவாஸத்ரய ஹோமங்கள், நித்ய ஹோமம், பூர்ணாஹிதி தொடர்ந்து ஸ்ரீவீரஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணை தலைவர் சூர்யா தனபால், நகர செயலாளர் முல்லை ரவி ஆகியோர் கலந்து கொண்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை துரை, தீத்து, சேட்டு, சுப்பிரமணி, கோபி, ஜெயக்குமார், முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
Next Story