என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அரசு அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து ஊதியம் பெறும் ஊழியர்? -விசாரணை நடத்த சக தொழிலாளர்கள் கோரிக்கை
- பெண் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து பணியில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
- உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள முக்கியமான அரசு அலுவலகம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஒருவர், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளாராம்.
இந்த நிலையில் இவரது பெயரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பெண் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து பணியில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அந்த அரசு அலுவலகத்தில் அலுவலக கோப்புகளை பார்த்தல், நிர்வாக ரீதியான பணிகளில் ஈடுபடுதல், அலுவலகத்துக்கு வருகை தரும் பயனாளிகளிடம் கையூட்டு பெறுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் அந்த பெண் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, அரூர் அரசு அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து ஊதியம் பெறுதல், ஆள்மாறட்டம் செய்து அரசு வேலையை செய்தல், கையூட்டு பெறுதல் தொடர்பாக தருமபுரி மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.






