என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- வருவாய்த்துறையை முறைப்படி, சரியாக இயக்காத தமிழக அரசு தான்.
- தமிழக அரசு, வருவாய்த்துறையில் பணியாளர்கள் விடுத்துள்ள பணி அழுத்தம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு வருவாய்த்துறைக்கு பட்டா சம்பந்தமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் வருடக்கணக்கில் பட்டா சம்பந்தமாக வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு சென்று வந்த, மனதளவில், பொருளாதார அளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது.
இதற்கெல்லாம் காரணம் வருவாய்த்துறையை முறைப்படி, சரியாக இயக்காத தமிழக அரசு தான். இந்நிலையில் வருவாய்த்துறையினர் விதிப்படி வேலை என்ற போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதாவது வருவாய்த்துறை அலுவலகங்களில் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை பணிபுரியும் 14 ஆயிரம் பணியாளர்கள் அலுவலக நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், விடுமுறை நாட்களிலும் பணியாற்ற போவதில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு, வருவாய்த்துறையில் பணியாளர்கள் விடுத்துள்ள பணி அழுத்தம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழக அரசு, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அளிக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கும், மனுக்களுக்கும் காலத்தே விசாரணை நடைபெறவும், காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வு ஏற்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






