என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் வீசப்பட்ட கட்டு வீரியன் பாம்பு.
கட்டு வீரியன் பாம்பை ஏரியில் வீசிய மர்ம நபர்
- காடையாம்பட்டி பகுதியில் டேனிஷ் பேட்டை கோட்டேரி, பண்ணப்பட்டி ஏரி உள்ளிட்ட சில ஏரிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன.
- பண்ணப்பட்டி ஏரியில் கொடிய விஷம் கொண்ட கட்டு வீரியன் பாம்பை பிடித்து வீசி சென்றுள்ளார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியில் டேனிஷ் பேட்டை கோட்டேரி, பண்ணப்பட்டி ஏரி உள்ளிட்ட சில ஏரிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன. இந்த ஏரிகளில் இருக்கும் மீன்களை பிடித்து சில வியாபாரிகள் ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வந்தனர். ஏலம் முடிந்து சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது அனைத்து ஏரிகளிலும் மீன்கள் அதிகமாக உள்ளன. இந்த மீன்களை ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் கிலோ கணக்கில் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொதுமக்கள் மீன் பிடிப்பதை தடுக்க யாரோ ஒருவர், பண்ணப்பட்டி ஏரியில் கொடிய விஷம் கொண்ட கட்டு வீரியன் பாம்பை பிடித்து வீசி சென்றுள்ளார். இதனால் பொதுமக்கள் ஏரியில் மீன்பிடிக்க செல்ல தயங்குகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏரியில் பாம்பை வீசி சென்ற மர்மநபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






