search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரட்டாறு அணை நீர்தேக்கத்திலிருந்துஇன்று முதல் நீர் திறப்பு
    X

    வரட்டாறு அணை நீர்தேக்கத்திலிருந்துஇன்று முதல் நீர் திறப்பு

    • தண்ணீர் திறக்க பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்‌.
    • 30 கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி திறந்து வைத்து மலர் தூவினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை கடந்த சில மாதங்களுக்கு முன் நிரம்பியது. இதனால் விவசாய பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 25 ஏரிகள் பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும், நேரடி பாசனம் மூலம் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களும், 20 நாள் என 40 நாட்களுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி திறந்து வைத்து மலர் தூவினார். இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி ஆகிய 25 கிராமங்களில் உள்ள 5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

    இந்த விழாவில் வட்டாட்சியர் பெருமாள், பாசன விவசாயிகள் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

    Next Story
    ×