search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பையூர்  ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் இடு பொருட்கள் வாங்கி பயன்பெறலாம்
    X

    பையூர் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் இடு பொருட்கள் வாங்கி பயன்பெறலாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நுண்ணூட்டச்சத்து தரக்கூடிய மண்புழு உரம் ரூ.10, கால்நடைகளுக்கு தேவையான தீவனகரனை கோ-5, ஒரு ரூபாய்க்கும் கிடைக்கிறது.
    • பயிர் ஒண்டர் ஒரு கிலோ ரூ.225 -க்கு கிடைக்கிறது.

    குருபரப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனீஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜீனூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனைக்கு உள்ளது.

    வைகாசி மற்றும் கார்த்திகை பட்டத்திற்கு தேவையான அதிக விளைச்சல் கொண்ட நெல் விதைகளாவன நெல் பையூர்-1, உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.37, ஆடி மற்றும் புரட்டாசி மாத பட்டத்திற்கு ஏற்ற ரகமான ராகி பையூர்-2 உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.52, புரட்டாசி மாத பட்டத்திற்கு ஏற்ற ரகமான கொள்ளு பையூர்-2, உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.60, காய்கறிகளான பீர்க்கன், பாகற்காய், புடலங்காய் விதைகள் ஒரு பாக்கெட் ரூ.20க்கு கிடைக்கும்.

    மேலும், நாற்றுகளாக வைகாசி மற்றும் கார்த்திகை பட்டத்திற்கு தேவையான நெல் பையூர்-1, நாற்று 1 பாத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,200, அதிக விளைச்சல் தரும் தென்னை நாற்று ஆழியார்-1 ரூ.75, மா இளந்தண்டு ஒட்டு ரூ.40, மா நெருக்கு ஒட்டு ரூ.70, அலங்கார செடிகள் ரூ.20, பயிர் வினைவூக்கிகளான தென்னை டானிக் ஒரு லிட்டர் ரூ.325, பயிர் ஒண்டர் ஒரு கிலோ ரூ.225 மற்றும் இயற்கை உரங்களான பயிர்களுக்கு முதன்மை ஊட்டச்சத்துகளான தழைச் சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து தரக்கூடிய மண்புழு உரம் ரூ.10, கால்நடைகளுக்கு தேவையான தீவனகரனை கோ-5, ஒரு ரூபாய்க்கும் கிடைக்கிறது.

    எனவே இத்தகைய வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×