என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடும்ப பாதுகாப்பு நிதியை  ரூ.2.50 லட்சமாக உயர்த்த வேண்டும் -ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
  X

  குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயர்த்த வேண்டும் -ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
  • மருத்துவ படி ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

  பொருளாளர ்ஜெயபால்வரவேற்றார். துணைத்தலைவர்கள் சதாசிவம், கந்தசாமி முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் 01.07. 2022-க்கு வழங்க வேண்டிய 4 சதவீத டி.ஏ-வை உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயர்த்த வேண்டும்.

  ஈமச்சடங்கிற்கு ரூ.25000- முன் பணமாக வழங்க வேண்டும். மருத்துவ படி ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும்.

  பொங்கல் திருநாளை கொண்டாட வழங்கி வரும் கருணைத் தொகையை ரூ.1000 ஆக உயர்த்தி ஏ,பி கிரேடு தரம் பார்க்காமல் ஆணை வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  முடிவில் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

  Next Story
  ×