search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கைக்காய் விலை புதிய உச்சம்: கிலோ ரூ.200-க்கு விற்பனை
    X

    முருங்கைக்காய் விலை புதிய உச்சம்: கிலோ ரூ.200-க்கு விற்பனை

    • குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, தேனி, கரூர், சிதம்பரம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் தற்போது உள்ள பனிப்பொழிவு காரணமாக முருங்கைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து பெருமளவு குறைந்தது.

    தினசரி 10 வாகனங்கள் மூலம் 80 டன் அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக 10 டன் அளவு முருங்கைக்காய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவு காரணமாக விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.150-க்கும், காய்கறி மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 வரையிலும் விற்கப்படுகிறது.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விலை எகிறி உள்ளது. இந்த விலை உச்சத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, முருங்கைக்காய் சீசன் முடிந்து விட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு தற்போது அதிக அளவு முருங்கைக்காய் வருகிறது. இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றார்.

    Next Story
    ×